'120 கோடி பேருக்கு டிஜிட்டல் அடையாளம்' India News

'120 crore people got Digital identity '

 ''நாட்டில், 120 கோடி மக்களுக்கு, ஆதார் எண் மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் நேற்று, நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகில், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சி ஏற்பட்ட போது, இந்தியா சுதந்திரம் பெறவில்லை.

மூன்றாவது தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தில், சுதந்திரம் பெற்று, கடும் சவால்களை, நாடு சந்திக்க வேண்டியிருந்தது.

ஆனால், நான்காவது தொழில் புரட்சி, இந்தியாவுக்கான காலமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலை வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என, யாரும் பயப்பட தேவையில்லை. நான்காவது தொழில் புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். நம் ஒற்றுமை, மக்கள் தொகையின் பலம், வளர்ச்சியடைந்து வரும் சந்தைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை, ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமாக, இந்தியாவை மாற்றும்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே, இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டிலும், இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம்,
பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மாற்றியுள்ளது. 

நாட்டில் உள்ள, 120 கோடி மக்களுக்கு, ஆதார் அட்டை மூலம், டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. அலைபேசி இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டில், ௫௦ சதவீதம் பேர், அலைபேசி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi, PM Modi, Modi's statements, Details of Modi, Digital identity to people, Digital identity, தொழில் புரட்சி, அலைபேசி இணையதள சேவை, Modi's government, டிஜிட்டல் அடையாளம்