இணையத்தில் லீக் ஆன 6.5 இன்ச் ஐபோன் Technology News

6.5 inch iPhone shows up in detailed renders

6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

Tags : apple, iPhone, iPhone X, Smartphone, ஆப்பிள், ஐபோன், ஐபோன் X, ஸ்மார்ட்போன்