ஏர்டெல் டிவியில் ஹாட்ஸ்டார் இலவசம் Technology News

Airtel Customers can view Hotstar content for free

பாரதி ஏர்டெல் மற்றும் ஹாட்ஸ்டார் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய ஒப்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு நன்மையை வழங்குகிறது.

ஸ்டார் இந்தியாவின் ஹாட்ஸ்டார் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களிடையே ஏற்பட்டிருக்கும் புதிய ஒப்பந்தம் ஏர்டெல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் சேவையை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியை வழங்குகிறது.

2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இடையே இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த வகையில் ஜியோவை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஹாட்ஸ்டாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது.

ஹாட்ஸ்டார் சேவையை மட்டும் இலவசமாக பார்க்க முடியும் என்ற வகையில், பிரீமியம் தரவுகளுக்கு தனியே பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி செயலி அல்லது ஏர்டெல் டிவி செயலிகளை கொண்டு ஹாட்ஸ்டார் தரவுகளை சந்தா செலுத்தாமல் பார்க்க முடியும்.

பிரீமியம் தரவுகளை பார்க்க மாதம் ரூ.199 செலுத்த வேண்டும். இந்த தொகையை ஏர்டெல் டிவி அல்லது ஜியோ அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த முடியும். இணையத்தில் கிடைக்கும் தரவுகளை ஆப்பரேட்டர்களால் இலவசமாக வழங்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கை விதிமுறைகளுக்கு மாறானது. 

இதனை எதிர்கொள்ள இண்ட்ராநெட்டில் தரவுகளை வாங்கி, சொந்தமான லைப்ரரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். ஹாட்ஸ்டார் சேவையை பொருத்த வரை ஏர்டெல் அல்லது ஜியோ வழங்குவது இண்டராநெட் போன்றவையே.

Tags : attamil,tamilnews,technology,technologynews,Airtel, Hostar, Airtel TV App, ஏர்டெல், ஹாஸ்டார், ஏர்டெல் டிவி ஆப்