திருக்கோவிலூரில் கட்-அவுட் சரிந்து அஜித் ரசிகர் ஒருவர் பலி Cinema News

Ajith Fan dead in Thirukovilur

திருக்கோவிலூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith #Viswasam

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். கட் அவுட், பேனர், பால் அபிஷேகம் என்று திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.
இதில் திருக்கோவிலூரில் விஸ்வாசம் படத்தின் பெரிய கட்-அவுட் வைக்கும் போது, சரிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

 

 

Tags : Ajith, Viswasam, Thala, Ajith kumar, Ajith Fans, அஜித், தல, தல அஜித், விஸ்வாசம்