வெளிநாடுகளுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்தக் கூடாது : பில்கேட்ஸ் World News

America should not stop abroad for help: Bill Gates

வெளிநாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அதிபர் ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்கருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், வெளிநாடுகளுக்கான பல்வேறு நிதிகளை ரத்து செய்து அதை சொந்த மக்களுக்கே செலவிடப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு உதவும் அமெரிக்காவின் செயல்பாடு, சொந்த நாட்டு குடிமக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க பயன்பட்டு வருவதாகவும் அதில் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பெரும்பகுதி மக்கள் பசியிலும் நோயிலும் வாடுவது இந்த உலகத்திற்கு நல்லதல்ல என்றும் பில்கேட்ஸ் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : attamil,tamilnews,attamil,tamilnews,america,americanews,unitedstatesofamerica,unitedstatesofamericanews,unitedstates,unitedstates,united,unitednews,usanews,usanews,usnews,us, americanewsintamil,worldrichestperson,worldrichestpersonbillgates,America should not stop abroad for help: Bill Gates