சத்து நிறைந்த கம்பு ரவை வெண்பொங்கல் Lifestyle News

Bajra Pongal

சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பை வைத்து வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் : கம்பு ரவை - ஒரு கப்

பாசிப்பருப்பு - கால் கப்

ப.மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 10 இலைகள்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். 

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சுத்தம் செய்த கம்புரவை, வறுத்த பாசிப்பருப்பை தேவையான அளவு உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து குழைய வேகவிடவும். 

வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொங்கலில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். 

அருமையான கம்பு ரவை வெண்பொங்கல் ரெடி.

தேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட சூப்பராக இருக்கும். 

Tags : tamilnews,attamil,samayal,Bajra Pongal,சத்து நிறைந்த கம்பு ரவை வெண்பொங்கல்,bajra pongal, pearl pongal, kambu ven pongal, ponga, millet recipes, பொங்கல், கம்பு ரவை பொங்கல், சிறுதானிய சமையல்