சூப்பரான முட்டை - பிரட் உப்புமா Lifestyle News

Bread egg upma

மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடாக சாப்பிட முட்டை - பிரட் உப்புமா சூப்பராக இருக்கும். இன்று இந்த உப்புமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் - 5
முட்டை - 3
வெங்காயம் - 2
கடுகு - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரட்டை உதிரியாக உதிர்த்து கொள்ளவும். 

முட்டையில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து உதிரியாக வரும் வரை வதக்க வேண்டும். 

முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் பொடித்து வைத்துள்ள பிரட்டை போட்டு மிதமான தீயில் வதக்க வேண்டும். 

எல்லாம் சேர்ந்து வந்தவுடன் அதில் கொத்தமல்லிதழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான முட்டை - பிரட் உப்புமா ரெடி.

 

 

Tags : attamil,tamilnews;healthnews,health,bread egg upma, egg upma, upma, bread recipes, egg recipes, முட்டை உப்புமா, உப்புமா, முட்டை சமையல், ஸ்நாக்ஸ்