காசநோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டம் India News

Central Government Scheme to pay Rs.500 to TB patients

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டி.பி.) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.

   இந்நிலையில், காசநோயை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. இதற்கு செலவு நிதி கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழ்மையான காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிட முடியும். மேலும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும்.

காசநோயை 2025-ம் ஆண்டிற்குள் 90 சதவீதம் ஒழிக்கும் விதமாக, இத்திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுத்த உள்ளது. மேலும், திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி 2030-ம் ஆண்டிற்குள் காசநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95 சதவீதம் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதார துறையின் அறிக்கையின்படி, கடந்த 2015-ம் ஆண்டு வரை லட்சத்தில் 217 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது 2016-ல் 211 ஆக குறைந்தது.

  தற்போது காசநோயாளிகள் வாரந்தோறும் மூன்று முறை மருந்து சாப்பிடுகிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள் தினமும் மருந்து சாப்பிட ஏதுவாக புதிய மருந்துகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும், குழந்தைகளுக்கு கசப்பான மாத்திரைக்கு பதிலாக எளிதில் கரையக்கூடிய இனிப்பு சுவையுள்ள மருந்துகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : attamil,tamilnews,indianews,காசநோயாளிகளுக்கு,காசநோயாளிகள்,Central Government Scheme to pay Rs.500 to TB patients,Central Government Scheme,Central Government, மத்திய அரசு,காசநோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்க மத்திய அரசு,