பிரான்சில் புறநகர் பகுதியில் ஒன்றான சொய் லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்சோலை மாலை

Choisy le Roi Franco Tamil sngam

சொய் லு றூவா தமிழ்ச்;சோலையின் 8 வது ஆண்டுவிழா மாநகரசபை மண்டபத்தில் 20.01.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்பகல் 14.30 மணிக்கு வரவேற்பு ஒளி ஏற்றி வைக்கப்பட்டது. Choisy le Roi மாநகர முதல்வர்  Mr Didier Guillaume : Maire de Choisy-le-Roi உதவி முதல்வர் Mme Benkahla : Maire-adjoint de Choisy-le-Roi, responsable de la Vie Associative, des droits de l’homme et des actions contre les discriminations  மற்றும் கலாசாரம், விளையாட்டுத்துறை கல்வி பொறுப்பாளர் Mr Hassan Aoummis : Maire-adjoint de Choisy-le-Roi, responsable de Sport et éducation à la citoyenneté, relations avec les communautés cultuelles. kற்றும் முக்கியஸ்தர்கள் தமிழ் அமைப்பைச்சேர்ந்தவர்கள்> தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களால் ஆசிரியர்களால் வரவேற்பு செய்யப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மங்கல விளக்கினை மாநகர முதல்வர், உதவி முதல்வர், பொறுப்பாளர்கள் மற்றும்  தமிழ்சங்க கூட்டமைப்பு உறுப்பினர் திரு. விசுவநாதன், தமிழ்ச்சோலை தலைமைப்பணியத்தின் சார்பாக திரு. அகிலன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக திரு. மேத்தா அவர்களும் ஏற்றி வைத்தனர். அகவணக்கம் செய்யப்பட்டது. அகவணக்கத்தில் குறிப்பாக சாவடைந்த பிரான்சு மக்களுக்கும், இம்மாநிலத்தில் அண்மையில் வேலைநேரம் இறந்து போன தீயணைப்பு படையினருக்கும் அகவணக்கம் செய்யப்பட்டது. மாணவர்களால் தமிழச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்கள் சங்கத்தலைவர், உறுப்பினர்களால் பொன்னாடை போத்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கலைநிகழ்வுகளாக வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. வரவேற்புரை பிறங்கோ தமிழ்சங்கத் தலைவர் திரு. Hyginus ALOYSIUS  அவர்கள் ஆற்றியிருந்தார். தமிழ் மக்கள் பற்றியும், எங்கள் மொழி பண்பாடு, மறைந்து விடாது நாம் பாதுகாப்பதாகவும் அடுத்த தலைமுறைகளும் அதனை தொடரவே நாம் மொழிக்கல்வியையும், எமது கலைகளையும், கலாச்சாரங்களையும், தமிழச்சோலை மூலம் எமது பெரியவர்கள் ஆற்றிவருகின்றனர் இதற்கு பிரான்சு மண்ணும் இந்த மாநகரமும் பெரிதும் உதவி வருகின்றது அதற்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.


சொய் லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்சோலை மாலை படங்கள்


அதனைத் தொடர்ந்து மாவீரர் வணக்கப்பாடல் நடனம்,தமிழ்மொழியிலான அபிநயப்பாடல்,கதைப்பாடல், சிறுவர் பாடல், ஆங்கிலப்பேச்சு, தாளலயம், கீர்த்தனம், வில்லிசை, கிராமிய நடனம், வாத்தியஇசை,காத்தவராயன்கூத்து போன்ற 28 நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. மாணவர்களின் ஆக்கங்கள் கொண்ட நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. எமது பாரம்பரிய கலாச்சார கூத்து நாடகம் ( காத்தவராயன் ) மாணவர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமார், திரு. விசுவநாதன் அவர்களும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். தமிழ்ச்சோலை ஆசிரியர் தமிழ்ச்சோலை தலைமைப்பணியக தேர்வுப்பொறுப்பாளர் திரு. அகிலன் அவர்களால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. உரையும் ஆற்றியிருந்தார்.

 

தமிழின் தொன்மை பற்றியும், உலகில் தமிழனின் இருப்புப் பற்றியும், மற்றைய மொழிகள்  யாவும் தமிழ் மொழியின் அடிப்படைச் சொல்லைக் கொண்டே இருந்திருக்கின்றது என்பதையும் சொய் லு றுவா தமிழச்சோலை மாணவர்கள் கல்வியில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றார்கள் என்பதை தமிழ்ச்சோலை ஆரம்பித்து 8 ஆண்டுகளில் முதற்தடவையாக இந்த ஆண்டுவிழாவினை மிகவும் சிறப்பாக செய்துள்ளமையினை பாராட்டியிருந்தார்.

 

சிறப்புரையை வழங்கிய திரு. மேத்தா அவர்கள் பிராங்கோ தமிழச்சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஆரம்பத்திலேயே எழுதப்பட்ட வாக்கியம் தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம் என்ற வாக்கியமே; போதும் இந்த சொய் லு றுவா பிறாங்கோ தமிழ்சங்கத்தின் தமிழ்மீது கொண்டுள்ள பற்றுதல் என்றும் இன்று சர்வதேசம் எங்கும் அவுஸ்ரேலியா, கனடா போன்ற வல்லரசு தேசங்களும், அமெரிக்கா வெர்ஐpனியா மாநிலமும், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான Nஐர்ஐpயாவும், பிரித்தானியாவும் தமிழ்மொழியை தமது அரசுமொழிகளில் ஒன்றாகவும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலினை தமிழர் நாளாக பிரகடனப்படுத்துவதும், வாழ்த்துவதுமாக இருக்கின்ற இவர்களுக்கு தங்கள் கண்முன்னால் உலகின் மூத்த இனங்களில் ஒன்றாகவுள்ள தமிழர்கள் அழிக்கப்படும்போது நாம் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏன் இதுவரை தோன்றவில்லை என்பதை கேட்டதோடு எமது இனத்தை நாமேதான் தான் காப்பாற்ற வேண்டும்.

 

எதிர்காலத்தில் எமது இளைய வளர்ந்து வரும் எமது சந்ததியினர் நிச்சயம் செய்வார்கள் என்பதையும் அதுவரை எமக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டி தொடர்ந்து சர்வதேசத்தின் கதவுகளைத்தொடர்ந்து தட்டவேண்டும் என்றும் எதிர்வரும் மார்ச் 12ம் நாள் நடைபெறவுள்ள நீதிக்கான பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எமது பாரம்பரிய கூத்து வடிவத்தின் வாசனையே தெரியாத இளம் சந்ததியினர் அதனை அப்படியே சபையோர் கண்முன் மேடையில் கூத்தமைத்ததும் அதனை பழக்கிய ஆசிரியர்கள்> மற்றோர்கள் இவரால் பாராட்டப்பட்டனர். மாவீரர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும்> சான்றிதழ்களும்> வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளித்திருந்தார்.


தமிழ்ச்சோலை குழந்தைகளின் நிகழ்வுகள் யாவும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைபெற்றன.  

Tags : Choisy le Roi Franco Tamil sngam,Tamilsolai,responsable de la Vie Associative,france tamil Association,france tamil Association paris