அசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ் Cinema News

Dhanush Change Asuran Getup

தனுஷ் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘அசுரன்’ படத்திற்காக புதிய கெட்-அப்பில் மாறி இருக்கிறார். #Dhanush #Asuran

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்' என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் கெட்-அப்புக்கு மாறி இருக்கிறார் தனுஷ். மேலும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Tags : Dhanush, Asuran, Vetri Maran, தனுஷ், அசுரன், வெற்றி மாறன்