சிம்புவுடன் நடிக்க மறுத்த தனுஷ் Cinema News

Dhanush refused to act with Simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மற்றொரு முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுடன் சேர்ந்த நடிக்க மறுத்ததாக கூறி இருக்கிறார். #Dhanush #STR #VadaChennai

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வடசென்னை’. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன். இப்படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தனுஷ் பேசும்போது, ‘வடசென்னை’ திரைப்படம் 2003, 2004ல் இருந்து உருவான கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்தோம்.

மீண்டும் நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்பு வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். சூப்பர் சார் என்று கூறினேன். பின்னர், மற்றொரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் அப்போது எனக்கு பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அந்தளவிற்கு இல்லை என்று கூறி நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

பின்னர் சில காரணங்களால், சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. 2003ல் ஆரம்பித்தது சுற்றி சுற்றி கடைசியாக என்னிடமே வந்து விட்டது. அதுப்போல், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கும் முதலில் அவரைத்தான் தேர்வு செய்தோம். அப்புறம் சுற்றி சுற்றி கடைசியாக அவரையே நடிக்க வைத்தோம். 

Tags : Dhanush, STR, Simbu, VadaChennai, தனுஷ், சிம்பு, வடசென்னை