ரஜினியின் பேச்சை மறைமுகமாக விமர்சித்த இயக்குனர்? தற்போது புது விளக்கம் Cinema News

Director who indirectly criticized Rajini's speech? New description now

நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு விழாவில் பேசும்போது "உழைப்பு, முயற்சியால் மட்டும் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்" என பேசினார்.

அதே வேளையில் மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் ட்விட்டரில் ஒரு திருக்குறளை பதிவிட்டார்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்"என்ற குறளை அவர் ட்விட்டினார்.

"தெய்வம் நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்" என்பது தான் இதன் அர்த்தம்.

இதுபற்றி ரஜினி ரசிகர்கள் பலர் நவீனை ட்ரோல் செய்ய ஆரம்பித்த நிலையில் அவர் "நான் சொன்ன குறலுக்கும் தலைவர் பேசியதற்கு எந்த தொடர்பும் இல்லை" என தற்போது அவர் விளக்கம் கூறியுள்ளார்.

Tags : rajini,actorrajini,rajinikarthicksubbaraj