'கூட்டணிக்கு ஸ்டாலின் ஆசைப்படுகிறாரா?' India News

'Does Stalin Want to Alliance?'

''பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆசைப்படுகிறார் போலிருக்கிறது,'' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.

டில்லியில் அவர் கூறியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, பிரதமர் மோடி, தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பிரதமர், தன் உரையில், கூட்டணிக்கான கதவுகள் திறந்துள்ளன என குறிப்பிட்டது, தி.மு.க.,வை மனதில் வைத்தல்ல.இதை, ஸ்டாலின், தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாக, எப்படி நினைத்தார் என தெரியவில்லை.

அவரது அவசர மறுப்பு அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. 'ராகுல் தான் பிரதமர்' என அவர் கூறிய போதே, பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். நாங்களும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். தங்களைத் தான், பிரதமர் அழைக்கிறார் என, ஸ்டாலின், தானாகவே புரிந்து கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும். பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு, ஸ்டாலின் தான் ஆசைப்படுகிறார் போல்இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Stalin, Details of Stalin, Stalin's politics, Leader Stalin, Statements of Stalin, Plans of Stalin, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, Tamil Nadu, BJP leader, Tamilisai, Statements of Tamilisai, Stalin's speech, ஸ்டாலின் ஆசை, ஸ்டாலின், Alliance, கூட்டணி