தஜிகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு World News

EAM Sushma Swaraj met Foreign Minister of Tajikistan Sirojiddin Muhriddin in Dushanbe today

தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan

இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். 

இந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan

Tags : tajikistan, foreign minister sirojiddin muhriddin, sushma swaraj, meet, தஜிகிஸ்தான், வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடின், சுஷ்மா சுவராஜ், சந்திப்பு