தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் Cinema News

Famous Bollywood Star joins in Thalapathy 63

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்திருக்கிறார். #Thalpathy63 #Vijay #ThalapathyVijay

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #JackieShroff

Tags : Thalapathy 63, Vijay, Thalapathy Vijay, Vijay 63, Atlee, Nayanthara, Jackie Shroff, தளபதி 63, விஜய், தளபதி விஜய், அட்லி, நயன்தாரா, ஜாக்கி ஷெராப்