தீவிபத்தில் சிக்கிய நடிகை தீபிகா படுகோன் போட்ட ட்விட் Cinema News

Fiery actress Dipika Padukone played Dwight

முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.


இந்நிலையில் இன்று மதியம் அவர் வசித்துவரும் 34 அடுக்கு Beaumonde டவர்ஸ் அபார்ட்மெண்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 33வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


"நான் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. உயிரை பணயம் வைத்து தீயை அணைக்கும் வீரர்களுக்காக வேண்டிக்கொள்வோம்" என தீபிகா ட்விட்டரில் கூறியுள்ளார்.


இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.