தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! India News

Jallikattu Started in Vavuniyaapuram

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

   ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


*சங்க காலம் முதல் நடக்கும் வேளாண் பண்பாட்டு நடவடிக்கை ஜல்லிக்கட்டு"
*ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 945 அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன.

இதில் கலந்துக்கொண்ட அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமரின் காளை பத்து நிமிட்ங்களுக்கு மேல் களத்தில் நின்று வென்றுள்ளது.

இது குறித்து ராமர், "இரண்டு பொங்கல் பானை, மிக்ஸி, பட்டுப் புடவை பரிசாக என் காளை வென்றுள்ளது."என்கிறார்.

இது வரை 70 காளைகள் களம் கண்டுள்ளன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர்.

Tags : Jallikattu ,Vavuniyaapuram,Vavuniyaapuramnews,tamilnews,Jallikattu2018,Jallikattulatest,attamil,indianews,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு,Jallikattu Started in Vavuniyaapuram,ஜல்லிக்கட்டு,