அனுசரித்துப் போகக் கூடிய பெண்கள் முதலில் மாற வேண்டும் - லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து Cinema News

Lakshmi Ramakrishnan comment on MeToo Movement

திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் நிலையில், அனுசரித்துப் போகக் கூடிய பெண்கள் முதலில் மாற வேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். #LakshmiRamakrishnan

திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி மீடூ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைகள், பாடகிகள் என்று திரைத்துறையில் உள்ள பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்து வருகிறார்கள்.

இது தொடர்பாக டுவீட் செய்துள்ள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் “திரைப்படத் துறையை மட்டும் குறை சொல்வது சரியல்ல. மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், எந்த மாற்றம் வேண்டுமோ அதன் கருவியாக நாம் இருக்க வேண்டும். அனுசரித்துப் போகக் கூடியவர்களாகவும், இரையாகக் கூடியவர்களாகவும் இருக்கும் பெண்கள் முதலில் மாற வேண்டும். நம்முடைய சுய மரியாதை மற்றும் மதிப்பை விட உயர்ந்தது எதுவுமில்லை” என பதிவிட்டுள்ளார். #LakshmiRamakrishnan #MeToo

Tags : MeToo, Lakshmi Ramakrishnan, லட்சுமி ராமகிருஷ்ணன், மீடூ