ரூ.7,530 கோடிக்கு புது பட்ஜெட் India News

New budget for Rs 7,530 crore

புதுச்சேரி சட்டசபையில், 7,530 கோடி ரூபாய்க்கான, வரியில்லாத பட்ஜெட்டை, முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர், ஜூன், 4ல் துவங்கியது. பட்ஜெட்டிற்கு, மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், இரண்டு நாட்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டு, 5ம் தேதி, காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது.ஜூன், 19ல், பட்ஜெட் தாக்கல் செய்ய, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, 2018 - 19ம் ஆண்டுக்கான, வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மொத்தம், 7,530 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.ஆர்.காங்., மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags : முதல்வர் நாராயணசாமி, Narayanasaamy, நாராயணசாமி, Puthucheri, New budget, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், Rs 7,530 crore, ரூ.7,530 கோடி, புது பட்ஜெட்