ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை - பியூஷ் கோயல் உறுதி India News

No privatisation of Railways Piyush Goyal

ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கான சாத்தியமே இல்லை என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #PiyushGoyal #Railways

அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செய்தியாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று உரையாடினார். 

அதில், ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால், ரெயில் நிலையங்களின் மேம்பாடு, ரெயிலின் உள்கட்டமைப்பு, ரெயில் என்ஜின் தயாரிப்பு, ரெயில் பயணங்களின் போது வழங்கப்படும் உணவு போன்ற ரெயில்வேயின் முக்கியம் அல்லாத இதர பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறைவான செலவில் நிறைவான ரெயில்வே சேவையை வழங்கும் பொருட்டு அதிகளவிலான ரெயில்களை மின்சாரத்தின் மூலம் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். #PiyushGoyal #Railways

Tags : Piyush Goyal, Railways, பியூஷ் கோயல், ரெயில்வே