கொரியா கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியது World News

North Korea pulls out of inter-Korean liaison office

கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் தென்கொரியாவில் அமைக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா அதிகாரிகள் வெளியேறுகின்றனர். #NorthKorea #interKoreanliaison #SouthKorea

பகைநாடான தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடுக்க விரும்பிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டினார். 

தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார். 

இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச ஹாட்லைன் தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டது. தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்ய கூட்டுறவு அலுவலகம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சமீபத்தில் நடத்திய இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்னர் வடகொரியா அதிபரின் மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் முன்னர் இருந்ததுபோல் தீராத பகை நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. #NorthKorea  #interKoreanliaison #SouthKorea

Tags : North Korea, inter Korean liaison, South Korea, கொரியா, வடகொரியா, போர் பதற்றம்