விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : கைவிட்டது ரஷ்யா World News

Plan to send humans to space: Russia abandoned the plan

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 2 வீரர்களுடன், ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் புறப்பட்டது.கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல்லாஸ்டிக் என்ற அவசர வாகனம் மூலம், விண்வெளி வீரர்கள் இருவரும் பத்திரமாக தரையிறங்கினர்.

இதையடுத்து, சோயுஸ் ராக்கெட் கோளாறு குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ரஷ்யா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : Space, Humans to space, Russia, Russia abandoned, ராக்கெட், Rocket, சர்வதேச விண்வெளி ஆய்வு, சோயுஸ் ராக்கெட், Russian plan, ரஷ்யா, விண்வெளிக்கு மனிதர், விண்வெளி