கங்கை நதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த சமூக ஆர்வலர் அகர்வால் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் India News

PM Narendra Modi tweets saddened by the demise of Shri GDAgarwal Ji

கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அகர்வால் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Agarwal #SaveGanga #Modi

கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

87 வயதான அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில், சமூக ஆர்வலர் அகர்வால் மரணம் அடைந்தத்ற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், அகர்வால் மரணம் அடைந்த செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். அவரது பரந்த அறிவு மற்றும் சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்க்கிறேன்.

குறிப்பாக, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் அவர் நடத்திய போராட்டம் என்றென்றும் நினைவில் பசுமையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். #Agarwal #SaveGanga #Modi

Tags : rishikesh, activist agarwal, died, PM Modi, comdoles, ரிஷிகேஷ், சமூக ஆர்வலர் அகர்வால், மரணம், பிரதமர் மோடி இரங்கல்