பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல் Lifestyle News

Pongal Special Karuppatti Pongal

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க....

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்

பச்சரிசி - 1 கப்

பால் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

நெய் - அரை கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

முந்திரி - தேவைக்கு

உலர் திராட்சை - தேவைக்கு

பாதாம் - 10 (விருப்பப்பட்டால்)

பிஸ்தா - 10 (விருப்பப்பட்டால்)

 

 

செய்முறை :


பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி கொள்ளவும்.

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். 

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.


குறிப்பு  :

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும். 

Tags : Pongal Special Karuppatti Pongal ,Pongal Special,பொங்கல்,பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்,Pongal,Karuppatti Pongal,tamilnews,attamil,samayal,பொங்கல் ஸ்பெஷல்க,ருப்பட்டி பொங்கல்,