புதின் எனக்கு போட்டியாளர் மட்டுமே எதிரி அல்ல - டொனால்டு டிரம்ப் World News

Putin is a competitor not an enemy says Donald Trump

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு எதிரி அல்ல அவர் எனக்கு போட்டியாளர் மட்டுமே என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் ஐரோப்பாவில் சந்தித்து பேச உள்ளனர். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

“எனது ஐரோப்பிய பயணத்தின் போது ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசுவது எளிதான ஒன்றாகவே இருக்கும். புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஏன் ஒரு நாள் நானும் அவரும் நண்பர்களாக கூட ஆகலாம். இருப்பினும் புதினை எப்படிப்பட்டவர் என்பது பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.

புதினுடனான சந்திப்பின் போது, ஆயுத கட்டுப்பாட்டு விவகாரம், ஐ.என்.எப் ஒப்பந்தத்தை ரஷியா மீறுவது, புதிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது. உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags : Putin, Donald Trump, விளாடிமிர் புதின், டொனால்டு டிரம்ப்