இணையத்தில் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ்: சிறப்பம்சங்கள் வெளியாகின Technology News

Samsung Galaxy S9 Specifications Leaked via Retail Box Image


சாம்சங் நிறுவனத்தின் 2018 முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி மாத இறுதியில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018) விழாவில் சாம்சங் கேலக்ஸி S9 வெளியிடப்பட இருக்கிறது. 

உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. புகைப்படத்தில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் AKG வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட இயர்பட்ஸ் வழங்கப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போனிலும் ஆடியோ அம்சம் மேம்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

 

சாம்சங் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் புகைப்படத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் QHD+ sAMOLED டிஸ்ப்ளே, ரவுன்டெட் கார்னர்கள், IP தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் 12 எம்பி டூயல் பிக்சல் கேமரா சென்சார், சூப்பர் ஸ்லோ-மோ மோட் மற்றும் சூப்பர் ஸ்பீடு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், F/1.5 மற்றும் F/2.4 என இரண்டு அப்ரேச்சர்களை வழங்கப்படுதால் சூழலுக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்க வாடிக்கையாளர்கள் இரண்டு வித அப்ரேச்சர்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். 

இத்துடன் 8 எம்பி AF செல்ஃபி கேமரா, AKG வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இயர்போன்கள் வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 2 XL போன்று முன்பக்கம் ஸ்பீக்கர் மாட்யூல்கள் வழங்கப்படுமா அல்லது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களை போன்று முன்பக்கம் கீழ் பகுதியில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் முன்பக்க இயர்பீஸ் அடியில் ஒரு வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது. 

 

 

கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டதை போன்றே கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் காட்சியளிக்கிறது என்பதால் உண்மையில் இது S9 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் தானா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.  

எனினும் சி.இ.எஸ். 2018 விழாவில் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ புதிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்திருக்கிறார். கேலக்ஸி S8 சீரிஸ் போன்றே புதிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் கேலக்ஸி S9 மற்றும் கேலக்ஸி S9 பிளஸ் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கீக்பென்ச் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் என குறிப்பிடப்பட்டது. இத்துடன் கேலக்ஸி S9 சீரிஸ் சர்வதேச எடிஷனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : attamil,tamilnews,technolgynews,Samsung,Samsung Galaxy,Samsung Latest Phone,Samsung Latest,கேலக்ஸி S9,Samsung Galaxy S9,Samsung Galaxy Latest,Samsung Galaxy S9 Specifications Leaked via Retail Box Image,