விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் Cinema News

Seethakaathi Thearitical Rights bagged by Trident arts

பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Seethakaathi #VijaySethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் வாங்கியிருக்கிறார். முன்னதாக தணிக்கை குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ம்பர் இரண்டாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

Tags : Seethakathi, Vijay Sethupathi, Bharathiraja, Mahendran, Balaji Tharaneetharan, Remya Nambeeshan, Gayathrie, Archana, Parvati Nair, சீதக்காதி, விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன், ரம்யா நம்பீசன், காயத்ரி, பாரதிராஜா, அர்ச்சனா, பார்வதி நாயர், மகேந்திரன்