சுலப் இண்டர்நேஷனல் நிறுவனருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய நிக்கி ஆசியா பரிசு World News

Sulabh founder honoured with Japan Nikkei Asia Prize

ஏழை மக்களின் சுகாதாரத்துக்காக தொண்டாற்றிவரும் சுலப் இண்டர்நேஷனல் நிறுவனருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய நிக்கி ஆசியா பரிசு வழங்கப்பட்டது. #SulabhInternational #JapanNikkeiAsiaawards

ஆசிய நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, கலாச்சாரம் மற்றும் சமூகத்துக்கு சேவையாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜப்பான் நாட்டில் நிக்கி ஆசியா பரிசு அளிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பரிசை இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோருக்கு இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பொதுமக்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படவும் தொண்டாற்றிய சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் இந்த ஆண்டுக்கான நிக்கி ஆசியா பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற விழாவில் கலாச்சாரம் மற்றும் சமூகத்துக்கான நிக்கி ஆசியா பரிசை பிந்தேஷ்வர் பதக்(75) பெற்று கொண்டார். இந்த பரிசை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து கொண்டார். #SulabhInternational #JapanNikkeiAsiaawards

Tags : Sulabh founder, honoured, Japan, Nikkei Asia Prize, சுலப் இண்டர்நேஷனல் நிறுவனர், ஜப்பான், நிக்கி ஆசியா பரிசு