வர்மா டிரைலரை வெளியிட்ட சூர்யா Cinema News

Suriya Released Varma Trailer

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். #Varma #VarmaTrailer

தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Varma, Varma Trailer, Dhruv Vikram, Bala, Arjun Reddy, வர்மா, வர்மா டிரைலர், துருவ் விக்ரம், பாலா, அர்ஜுன் ரெட்டி