தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை ‍- பகுதி 2

Tamil Eelam National Flag

பயன்பாட்டுக்கோவை ‍ பகுதி 1

26. தேசியக்கொடியை இறக்குதல்

தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.

27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு

தேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.


தேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா?

தேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா?

கொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா?

நிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

கொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா?

தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா?

கொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா?

என்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம்.

தேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.

28. தேசியக்கொடியை அகற்றுதல்

நீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.

பயன்படுத்தமுடியாத கொடிகளைச் சேர்த்தல்

பழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினூடாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.பழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்தலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.

இறுதிச் சடங்கு

அகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.

பகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.

இறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள்;வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-

இந்தக்; கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்”

உரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார்; வணக்கஞ் (ளுயடரவந) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.

எரியூட்டும் சடங்கு

ஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (ளுயடரவந) செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.

கொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.

தமிழீழ கொடிக்கீதம்

ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

ஏறுது பார் கொடி ஏறுதுபார்

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது - பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது


சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது - சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது
ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயம்”

பயன்பாட்டுக்கோவை ‍ பகுதி 1

At Tamil,Tamil ,@tamil

Tags : Tamil Eelam National Flag,LiberationTigersofTamilEelamFlag,தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை,தமிழீழக் தேசியக்கொடி,Eruthupaar Kodi Eruthupaar Songs,Eruthupaar Kodi,tamil eelam,tamileelam flag, Tamil Eelam National flag Anthem,Images for tamil eelam flag, how to use tamil eelam flag