காவிரி நீரை திறக்க வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது India News

The farmers involved in the struggle to enter Cauvery water to insist on cauvery water have been arrested

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி கர்நாடக மாநிலத்துக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்குள் நுழையும் போராட்டம் நடைபெற்றது. ’கபிணி அணையை திறப்போம், கருகும் பயிர்களை காப்போம்’ என்ற முழக்கத்தோடு சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து நெடுஞ்சாலையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags : attamil,tamilnews,indianews,cauverynews,cauvery,The farmers involved in the struggle to enter Cauvery water to insist on cauvery water have been arrested,காவிரி நீரை திறக்க வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது