'மோடியுடன் கூட்டணி கிடையாது' அடித்துச் சொல்கிறார் ஸ்டாலின் India News

There is no alliance with Modi : Stalin confirms

'பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒரு போதும் கூட்டணி அமைக்காது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி, நம் பழைய நண்பர்களை வரவேற்க, நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள தன் கட்சி நிர்வாகிகளுடன், வீடியோ கான்பரன்சில் பேசுகையில், இவ்வாறு குறிப்பிட்டது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. 'சரியான மனிதர்; தவறான கட்சியில் இருக்கிறார்' என, கருணாநிதியால் வர்ணிக்கப்பட்டமுன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.இது, வழக்கம் போல, மோடியின் பிரசார யுக்தியாகவே உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற, ஒரே உன்னத நோக்கத்திற்காக, பா.ஜ., இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன், தி.மு.க., கூட்டணி வைத்தது. ஆனால், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வாஜ்பாய் உருவாக்கியது போன்ற ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில், நான்கரை ஆண்டுகளாக, பிரதமர் மோடி செயல்படுகிறார். அவரது தலைமையிலான, பா.ஜ.,வுடன், தி.மு.க., ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை, மீண்டும் ஆணித்தரமாக விளக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Stalin, Stalin confirms, Stalin latest news, Stalin's political decisions, வாஜ்பாய், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், Stalin's statements, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், No alliance with Modi, மோடியுடன் கூட்டணி, மோடி, Modi, ஸ்டாலின், BJP leader Modi, DMK, DMK leader Stalin