வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு India News

There is no vacation in weekdays: orders for judges

வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல 24 மாநிலங்களின் ஐகோர்ட்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : No vaction, Vacation, Order for judges, Supreme courts judge, நீதிபதிகளுக்கு உத்தரவு, நீதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ரஞ்சன் கோகய், Vacation in weekdays, விடுமுறை, வார நாட்களில் விடுமுறை