இது நம்ம பூமி, தாய் மாதிரி - உதயநிதி Cinema News

Udhayanidhi Kanne Kalaimane Trailer Released

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் இவர் பேசும் வசனம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KanneKalaimane

`தர்மதுரை' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, வசுந்தரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலரை இன்று விஜய்சேதுபதி வெளியிட்டார். இதில் ‘இது நம்ம பூமி, தாய் மாதிரி’ என்று உதயநிதி பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Tags : Kanne Kalaimane, Udhayanidhi Stalin, Seenu Ramasamy, Tamannaah, சீனு ராமசாமி, தமன்னா, கண்ணே கலைமானே, உதயநிதி ஸ்டாலின்