பேரணாம்பட்டில் சாலையோர கடையில் டீ குடித்த உதயநிதி ஸ்டாலின் India News

Udhayanidhi Stalin drank tea in a roadside shop in peramanpattu

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மண்டித்தெருவில் பிரசாரத்தை தொடங்கினார்.

இன்று 2-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். பேரணாம்பட்டில் இன்று பிரசாரம் செய்தார். அங்கு சாலையோர டீ கடையில் கட்சியினருடன் அமர்ந்து டீ குடித்தார்.

அந்த டீக்கான பணம் வாங்க கடை உரிமையாளர் மறுத்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் 100 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தார்.

பேரணாம்பட்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது இளைஞர்கள் கைகொடுத்து செல்பி எடுத்து கொண்டனர். #UdhayanidhiStalin #dmk

Tags : udhayanidhi stalin, dmk, parliament election,பாராளுமன்ற தேர்தல், திமுக, உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின்