போராட்டம் செய்த சர்ச்சை நடிகையால் ஆவேசமான விஷால்! Cinema News

Vishal is furious by the controversial actress!

நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.


அண்மையில் நடிகை ஸ்ரீரெட்டி பலரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தெலுங்கு சினிமாவை பரபரப்பாக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது.


பின் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டி விரைவில் சில விசயங்களை வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார்.


இந்நிலையில் விஷால் ஸ்ரீ ரெட்டியில் குற்றச்சாட்டு கொடூரமானது. நானியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்தி கொள்ள வேண்டும்.


ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என கோபமாக கூறியுள்ளார்.

 

Tags : Actor Vishal,நடிகர் விஷால்,currently,தயாரிப்பாளர் சங்க தலைவர்,director,தெலுங்கு சினிமா,Producer,நடிகை ஸ்ரீரெட்டி ,Association, நடிகர் சங்க செயலாளர்,Secretary,ஆதாரங்கள் ,voice,நடவடிக்கை ,many things,