'நன்மை செய்பவரை ஆதரிப்போம்!' : பழனிசாமி பேச்சு India News

'We will support those who do good things for people!' : Palanisamy

''தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்களே, மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான், எங்கள் நிலைப்பாடு; அவர்களை தான், நாங்கள் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை வடக்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலுார் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த, அ.ம.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, 1,400 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மக்களுடைய பிரச்னையை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி, அ.தி.மு.க., தான். மற்ற கட்சிகள் எல்லாவற்றிலும், குடும்ப அரசியல் தான் தலைதுாக்கி இருக்கும். தி.மு.க.,வை எடுத்துக் கொண்டால், கருணாநிதி மறைந்தார்; அவரது மகன் ஸ்டாலின் வந்து விட்டார். அடுத்து, உதயநிதி வரப் போகிறார். கருணாநிதி இருந்தபோதே, அவரது மகள் கனிமொழி, தயாநிதி, அழகிரி என, அவரது குடும்பத்தை சேர்ந்தோர் தான், பதவிக்கு வர முடிந்தது. அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட, உயர் நிலைக்கு வர முடியும். 

தமிழகத்திலும், இந்தியாவிலும், எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால், ஆளக்கூடிய கட்சியில், சிறந்த கட்சி, அ.தி.மு.க.,வாக தான்இருக்க முடியும். ஸ்டாலின், ஒவ்வொரு ஊராட்சியாக சென்று, கூட்டம் போட துவங்கி உள்ளார். ஏற்கனவே, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்; உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். அப்போதெல்லாம் கிராமத்திற்கு சென்று பார்க்காதவருக்கு, இப்போது தான் ஞாபகம் வந்திருக்கிறது. நாங்கள், கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள். கிராம மக்களுக்கு, என்ன வேண்டும்; எதை செய்ய வேண்டும் என்பது தெரியும். கிராமத்தையே பார்க்காதவர், ஸ்டாலின். ஏனென்றால், அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். பதவியில் இருக்கும்போது செய்ய மறுத்து விட்டு, இப்போது, கிராமத்திலிருந்து அரசியல் என்ற, புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கிறார். அனைத்து கட்சிகளையும் கூவி அழைத்து, கூட்டணி சேர்க்கிறார். எங்களை பொறுத்தவரை, தமிழகத்துக்கு யார் நன்மை செய்கின்றனரோ, அவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் நிலைப்பாடு; அவர்களை தான் ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை, நாங்கள், ஒருபோதும் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Palanisamy, Details of Palanisamy, Statements of Palanisamy, அ.தி.மு.க., ADMK, நிலைப்பாடு, Situation, Situation of Tamil Nadu, Palanisamy's speech, முதல்வர் பழனிசாமி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை வடக்கு, திருவண்ணாமலை வடக்கு, கடலுார் கிழக்கு, Palanisamy's politics, பழனிசாமி பேச்சு, பழனிசாமி, Palanisamy about alliance